இது ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படம் கிடையாது! - பிரபல இயக்குனர் அதிரடி!

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் தலைவி

By manikandan | Published: Dec 05, 2019 07:47 AM

  • மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் தலைவி எனும் பெயரில் ஹிந்தி மற்றும் தமிழில் A.L.விஜய் இயக்கி வருகிறார்.
  • அதே போல குயீன் எனும் தலைப்பில் ரம்யா கிருஷ்ணன் நடிக்க புதிய வெப் சீரிஸ் தயாராக உள்ளது என தகவல்கள் வெளியாகின.
முதலில் ஜெயலலிதாவின் வாழக்கை வரலாற்று வெப் சீரிஸ் தான் குயின் என கூறப்பட்டது. இதில் ஜெயலலிதா ரோலில் ரம்யா கிருஷ்ணன் நடித்துள்ளார். மேலும் பலர் நடித்துள்ளனர். கெளதம் வாசுதேவ் மேனனும், கிடாரி பட இயக்குனர் பிரசாந்த் முருகேசனும் இயக்கி உள்ளனர். இது குறித்து இயக்குனர் பிரசாந்த் முருகேசன் கூறுகையில் , இது ஜெயலலிதாவின் வாழக்கை வரலாற்று படம் கிடையாது. ஒரு பெண் எப்படி சினிமாவில் ஜெயித்து பிறகு தமிழக அரசியலில் ஆளுமை செலுத்துகிறார் என சில கற்பனை கலந்து எடுக்கப்பட்டுள்ளது எனவும், இதில் ரம்யா கிருஷ்ணனுக்கு கூட ஜெயலலிதா என பெயர் வைக்க வில்லை எனவும், படத்தின் கதாபாத்திர பெயர்கள், கட்சி கொடிகள் என அனைத்தும் வேறுபாடும் எனவும் கூறியுள்ளார். ரிலீஸ் சமயத்தில் எந்தவித பிரச்னையும் வந்துவிடக்கூடாது என இயக்குனர் இப்படி ஒரு விளக்கம் கொடுத்துள்ளார் என கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது. இந்த வெப் சீரிஸ் எம்.எக்ஸ்.பிளேயரில் வரும் 13ஆம் தேதி ரிலீசாக உள்ளது.
Step2: Place in ads Display sections

unicc