பி.வி.சிந்து இந்தியாவை மீண்டும் பெருமைபடுத்தியுள்ளார்-பிரதமர் மோடி வாழ்த்து

சுவிஸ்சர்லாந்தில் உலக பேட்மிண்டன்  சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது.  இன்று

By Fahad | Published: Apr 01 2020 02:35 PM

சுவிஸ்சர்லாந்தில் உலக பேட்மிண்டன்  சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது.  இன்று மகளிர் ஒற்றையர் பிரிவின்  இறுதிப்போட்டி நடைபெற்றது.இறுதிப்போட்டியில் சிந்து ஜப்பான் வீராங்கனை நசோமி ஒகுஹாராவுடன் மோதினார்.பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் சிந்து 21-7, 21-7  என்ற செட்டில் வெற்றிபெற்றார். இதன் மூலமாக இந்த போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்தார் பி.வி.சிந்து.இந்தநிலையில்  உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற இந்திய வீராங்கனை பி.வி.சிந்துவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார் .அவரது வாழ்த்து  செய்தியில், பி.வி.சிந்து இந்தியாவை மீண்டும் பெருமைபடுத்தியுள்ளார். பி.வி.சிந்துவின் வெற்றி வருங்கால வீரர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் அமையும் என்று தெரிவித்துள்ளார்.