எம்மாடியோவ்! இன்ஸ்டாகிராம் மூலம் 12 லட்சம் சம்பாதிக்கும் நாய்க்குட்டி! உங்களால் நம்ப முடிகிறதா?

இன்றைய நாகரீகமான உலகில் மக்களை அதிகமாக அடிமையாக்கி உள்ள ஒரு விடயம் என்னவென்றால்

By leena | Published: Aug 01, 2019 02:13 PM

இன்றைய நாகரீகமான உலகில் மக்களை அதிகமாக அடிமையாக்கி உள்ள ஒரு விடயம் என்னவென்றால் அது சமூக வலைத்தளங்கள் தான். இன்று சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை தங்களது அதிகமான நேரத்தை சமூக வலைத்தளங்களான இன்ஸ்ட்டாகிராம், பேஸ்புக், வாட்சப், ட்வீட்டர் போன்றறில் தங்களது நேரத்தை செலவழிக்கின்றனர். இந்த சமூகவலைத்தளங்களை தங்களது வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக பயன்படுத்துபவர்களுக்கு உண்டு. ஆனால், அவ்வாறு பயன்படுத்துபவர்கள் ஒரு மனிதனாக தான் இருப்பார்கள். தற்போது,  இன்ஸ்ட்டாகிராம் மூலம் லட்சக்கணக்கில் சம்பாதிக்கும் ஒரு நாய்குட்டியை பற்றி பார்ப்போம். ஜிஃப்பாம் என்னும் குட்டி பொமரேனியன் நாய், இன்ஸ்டாகிராம் மூலம் தனது கலக்கலான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியிட்டு 12 லட்சம் சம்பாதிக்கிறது. அழகான முகத்தைக் கொண்ட, இந்த குட்டி நாய் தனது குறும்புத்தன வீடியோக்களால் மக்களை தன் வசம் கட்டி போட்டுள்ளது. இது தன்னுடைய குறும்புத்தன வீடியோக்களால், இன்ஸ்டாகிராமில் மட்டும் 9.2 மில்லியன் ஃபாலோவர்களைக் கொண்டுள்ளது. ஒட்டுமொத்த சமூகவலைத்தளங்களையும் சேர்த்து கணக்கிட்டால், இந்த குட்டி நாய் 30 மில்லியன் ஃபாலோவர்களை கொண்டுள்ளது. இந்த நாய்குட்டி இன்ஸ்டாகிராமில் அறிமுகமாவதற்கு முன்பதாகவே, இரு கால்களால் வேகமாக நடக்கும் நாய் என கின்னஸ் உலக சாதனையை படைத்துள்ளது. மேலும், இது இன்ஸ்டாவில் அதிக ஃபாலோவர்களை கொண்ட நாய் என்ற கவுரவத்தையும் பெற்றுள்ளது. இந்த நாய்குட்டி, ஹாலிவுட் படங்கள், ஆல்பம் பாடல்கள் போன்ற வீடியோக்களில் இடம்பெற்று சினிமா பிரபலமாகவும் வலம் வருகிறது.    
 
View this post on Instagram
 

?

A post shared by jiffpom (@jiffpom) on

Step2: Place in ads Display sections

unicc