இன்று கூடுகிறது புதுச்சேரி சட்டப்பேரவை கூட்டத்தொடர் !

புதுச்சேரி  யூனியன் பிரதேசம் என்பதால் பட்ஜெட்டிற்கு மத்திய அரசின் ஒப்புதல் பெறுவது கட்டாயம் ஆகும்.எனவே இந்தாண்டுக்கான  பட்ஜெட் மத்திய அரசின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.இந்த  பட்ஜெட்டிற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது.

இந்த நிலையில்  புதுச்சேரியில்   பட்ஜெட் கூட்டத்தொடர் வருகிற 26-ஆம் தேதி கூடுகிறது என்று சட்டசபை செயலாளர் வின்சென்ட் ராயர் அதிகாரபூர்வமாக அறிவிப்பு வெளியிட்டார்.இதனைத்தொடர்ந்து  வருகின்ற  28-ஆம் தேதி முதலமைச்சர் நாராயணசாமி பட்ஜெட் தாக்கல் செய்வார் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இந்தநிலையில் இன்று புதுச்சேரியில் சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்குவதையொட்டி போராட்டம் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.இன்று புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி உரையுடன்  பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்குகிறது. பட்ஜெட் கூட்டத்தொடர் முடியும் வரை பெரியகடை காவல் எல்லைக்குள் அனுமதியின்றி போராட்டம் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.