புதுச்சேரி சட்டப்பேரவை- இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார் முதல்வர் நாராயணசாமி

புதுச்சேரி சட்டப்பேரவையில் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார் முதல்வர்

By venu | Published: Mar 30, 2020 10:03 AM

புதுச்சேரி சட்டப்பேரவையில் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார் முதல்வர் நாராயணசாமி.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் கடும் பாதிப்பை ஏற்படுத்தி  வருகிறது.உயிர்பலி மற்றும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது.இந்தியாவிலும் இதன் பாதிப்பு அதிகரித்து வருகிறது.நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.இதற்கு இடையில்  புதுச்சேரி மாநிலத்தில் இன்று இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று எம்எல்ஏக்கள் புதுச்சேரி  சட்டப்பேரவைக்குள் முக கவசத்துடன் அனுமதிக்கப்பட்டனர். கிருமிநாசினியும் வழங்கப்பட்டது.பின் புதுச்சேரி சட்டப்பேரவையில் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார் முதல்வர் நாராயணசாமி. உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு புதுச்சேரி சட்டப்பேரவையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

 

Step2: Place in ads Display sections

unicc