2 நாட்களுக்கு புதுச்சேரி முதல்வர் அலுவலகம் மூடல்..அலுவலக ஊழியருக்கு கொரோனா.!

2 நாட்களுக்கு புதுச்சேரி முதல்வர் அலுவலகம் மூடல்..அலுவலக ஊழியருக்கு கொரோனா.!

புதுச்சேரி முதல்வர் அலுவலகம் 2 நாட்களுக்கு மூடல்.

அலுவலக ஊழியருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் 2 நாட்களுக்கு அலுவலகம் மூடப்படுகிறது என முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். இதனால் 2 நாட்களுக்கு யாரும் அலுவலகத்திற்கு வரவேண்டாம் என நாராயணசாமி தெரிவித்துள்ளார். மேலும் அவருடன் பணியாற்றும் சக ஊழியர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கொரோனா அச்சம் காரணாமாக அலுவலகத்திற்கு அதிக நபரை அனுமதிக்க மறுக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. புதுச்சேரியில் இதுவரை 502 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 187 பேர் குணமடைந்துள்ள நிலையில், 9 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறித்து  சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள  அறிக்கையில் இந்தியாவில் 5 லட்சத்தை கடந்தாகவும் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.
Join our channel google news Youtube