புதுச்சேரியில் முழு அடைப்பு போராட்டம் நடக்காது – நமச்சிவாயம்

  • குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து முழு கடைஅடைப்பு போராட்டம்  நடைபெறாது
  • மாநில தலைவர் நமச்சிவாயம் தகவல்

குடியுரிமை சட்டம் தொடர்பாக நாடு முழுவதும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.மேலும் இந்த சட்டத்திற்கு எதிராக பல்வேறு கட்சிகள் கண்டன ஆர்பாட்டங்களையும்,போராட்டங்களையும் , பேரணிகளையும் நடத்தி வந்த நிலையில் புதுச்சேரியில் மாநிலத்தில் டிசம்பர் 27 குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக காங்கிரஸ், திமுக கூட்டணி கட்சிகள் இணைந்து முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தது.இந்நிலையில் டிச.,27ல்  நடத்தவிருந்த முழு அடைப்பு போராட்டம் தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

போராட்டம் ஒத்திவைக்கப்படுவதாக மாநில காங்கிரஸ் தலைவர் நமச்சிவாயம் தெரிவிக்கையில் டிச.,27ல்  நடத்தவிருந்த முழு அடைப்பு போராட்டம் ஆனது வியாபாரிகளின் கோரிக்கையை ஏற்று  ஒத்திவைக்கப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.

author avatar
kavitha