"ஆன்லைனில் படம் வெளியாவது ஆரோக்கியமில்லை".! கடம்பூர் ராஜு பேட்டி

"ஆன்லைனில் படம் வெளியாவது ஆரோக்கியமில்லை".! கடம்பூர் ராஜு பேட்டி

ஆன்லைனில் படம் வெளியாவது ஆரோக்கியமில்லை என்று கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார். 

உலகம் முழுவதும் கொரனோ வைரஸ் பரவிவருவதால் அணைத்து பெரிய படைகளின் படப்பிடிப்பு மற்றும் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது, மேலும் சில திரைப்படங்கள் ஆன்லைனில் வெளியாகிவருகிறது .  இந்த நிலையில் பொது முடக்கம் காரணமாக இணைய தளத்தில் திரைப்படங்களை வெளியிடுவது  பரவாயில்லை ஆனால் இது தொடர்வது சரியானதல்ல என்று அமைச்சர் கடம்பூர் ராஜு  தெரிவித்துள்ளார். 

மேலும் ஆன்லைனில் திரைப்படங்கள் வெளியிடுவதால் தயாரிப்பாளர்கள் மற்றும் வினியோகஸ்தர்கள் உள்ளிட்ட பலரும் பாதிக்கப்படுவார்கள் என்றும்  ஆன்லைனில் படங்களை வெளியிடுவது ஆரோக்கியமாக இருக்காது என்றும் அமைச்சர் அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார். தொடர்ந்து திரைப்படங்கள் ஆன்லைனில் வெளியானால் திரையரங்கிற்கு வரும் மக்கள்  அனைவருமே படங்களை ஆன்லைனில் பார்பார்கள் என்றும் கூறியுள்ளார்.