பொதுமக்கள் ஊரடங்கிற்கு ஒத்துழைப்பு தருகிறார்கள்-அமைச்சர் ஜெயகுமார்

பொதுமக்கள் ஊரடங்கிற்கு ஒத்துழைப்பு தருகிறார்கள் என்று  அமைச்சர் ஜெயகுமார்

By venu | Published: Apr 02, 2020 07:37 PM

பொதுமக்கள் ஊரடங்கிற்கு ஒத்துழைப்பு தருகிறார்கள் என்று  அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.

கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மருத்துவமனைகளும், மருந்துக்கடைகள், காய்கறி, பழக்கடைகள், மளிகை கடைகள், பெட்ரோல் பங்குகள் போன்ற அத்தியாவசிய கடைகள் வழக்கம் போல இயங்கி வந்தன.மேலும் பொதுப்போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் ரேஷன் கடைகள் மட்டும் வழக்கம்போல் திறந்திருக்கும் என்று அறிவிக்கப்பட்டது.

இதற்கு இடையில் இன்று ( ஏப்ரல் 2ம் தேதி ) முதல் ரேஷன் கடைகளில் கொரோனா நிவாரண உதவித்தொகை ₹1000 மற்றும் ஏப்ரல் மாதத்திற்கான அத்தியாவசிய பொருட்கள் இலவசமாக விநியோகிக்கப்படுகிறது.

இந்நிலையில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில் ,கூட்டுறவு சங்கங்கள் மூலம் ரூ.1000 வழங்கப்பட்டு வருகிறது. அரிசி, சர்க்கரை, பாமாயில் உள்ளிட்ட அனைத்தும் விலையில்லாமல் வழங்கப்படுகிறது. பொதுமக்கள் ஊரடங்கிற்கு ஒத்துழைப்பு தருகிறார்கள் என்று  அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.

Step2: Place in ads Display sections

unicc