வெற்றிகரமாக 10 செயற்கைக் கோள்களுடன் விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி48 ராக்கெட்..!

  • 10 செயற்கைக்கோள்களுடன் விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி48 ராக்கெட்.
  • இஸ்ரோ விண்ணிற்கு அனுப்பிய 50-வது பி.எஸ்.எல்.வி வகை ராக்கெட் ஆகும்.

ஆந்திர மாநிலத்தில் ஸ்ரீ ஹரிகோட்டாவில் சதிஷ் தவான் ஏவுதளத்திலிருந்து தற்போது சரியாக 3.25 மணிக்கு விண்ணில் பாய்ந்தது. 10 செயற்கைக்கோள்களுடன் விண்ணில் பாய்ந்த பி.எஸ்.எல்.வி. சி48 ராக்கெட் இதுவரை இஸ்ரோ விண்ணிற்கு அனுப்பிய 50-வது பிஎஸ்எல்வி வகை ராக்கெட் ஆகும்.

ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து அனுப்பப்பட்டுள்ள 75-வது ராக்கெட் எனப்படுகிறது.இது புவி கண்காணிப்பு, ராணுவப் பாதுகாப்புக்கு விவசாயம், இயற்கை பேரிடர் போன்றவைகளுக்கு உதவும் வகையில் செயற்கைக்கோளை அனுப்பப்பட்டிருகிறது. ரிசாட் 2பிஆர்1 செயற்கைக்கோளில் உள்ள ரேடார் மூலம் துல்லியமாக பூமியைப் படம்பிடிக்க முடியும். என வல்லுநர்கள் கூறுகின்றனர். மற்றும் அமெரிக்காவின் 6 செயற்கை கோள்களுடன், இத்தாலி, இஸ்ரேல், ஜப்பானினின் தலா ஒரு செயற்கைகோளுடன் செல்கிறது ரிசாட்2பி ஆர்1 ராக்கெட் .

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்