ஜேஎன்யூ பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஆதரவாக பேராசிரியர்கள் போரட்டம் ..!

ஜேஎன்யூ பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டம் தற்போது தேசிய அளவில் பேசப்பட்டு வருகிறது. சில வாரங்களுக்கு முன் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் விடுதி மாணவர்களுக்கு புதிய அறிவிப்பு ஒன்றை கல்லூரி நிர்வாகம் அறிவித்தது.
அதாவது விடுதி மாணவர்களுக்கு கட்டணம் உயர்த்தி உள்ளதாகவும் , விடுதியில் மாணவர்கள் என்ன உடை உடுக்க வேண்டும் போன்ற புதிய அறிவிப்பை அறிவித்தது.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜேஎன்யூ பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் நடத்தி வந்தனர்.
மாணவர்கள் முதலில் கல்லூரிக்கு உள்ளே போராட்டம் நடத்தினர்.சில நாள்களுக்கு முன் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இந்த பட்டமளிப்பு விழாவிற்கு சிறப்பு விருந்திரைனராக துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு கலந்து கொண்டார்.
அந்த பட்டமளிப்பு விழா அன்றும் கல்லூரி மாணவர்கள் கல்விக்கட்டணம் உயர்வு ,  துணி கட்டுப்பாடு விதிமுறைகளுக்கு எதிராக போராட்டம் நடத்தினர்.இது பற்றி  மாணவர்கள் கூறுகையில் , நாங்கள் அனைவரும் வறுமையான குடும்பத்தில் இருந்து வருகிறோம். எங்களால் இவ்வளவு கட்டணம் கட்ட முடியாது.
கட்டணத்தை உயர்த்துவதும் குறித்தும் , புதிய விதிகளை கொண்டு வருவது குறித்தும் எங்களிடம் ஆலோசிக்காமல் நிர்வாகம் முடிவு எடுத்து உள்ளதாக கூறி மாணவர்கள் போராடி வருவதாக கூறினர்.ஆனால் கல்லூரி நிர்வாகம் கட்டண உயர்த்தியதில் பாதியை திரும்ப பெறுவதாகவும் முழு கட்டண உயர்வை திரும்ப பெற முடியாது என கூறியுள்ளனர்.
இதை அடுத்து  மாணவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள்.இந்நிலையில் நேற்று முன்தினம் மாணவர்கள் நாடாளுமன்றம் நோக்கி பேரணி நடத்தினார்கள். மாணவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.இதனால் நாடாளுமன்றம் செல்லும் பாதையில் பெரிய போராட்டம் நடந்தது.இதனால் பல இடங்களில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களின் சில பேரின் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து உள்ளனர்.இதையடுத்து கல்லூரியில் உள்ள பேராசிரியர்கள் மாணவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்ததை எதிர்த்து கல்லூரி உள்ளே போராட்டம் நடத்தி வருகின்றனர்.

author avatar
murugan