பிரியா பவானிசங்கருக்கு அடித்த ஜேக்பாட்! அடுத்தடுத்து பிரமாண்ட நாயகர்கள் படத்தில் கமிட்டாகி வருகிறார்!

பிரியா பவானிசங்கருக்கு அடித்த ஜேக்பாட்! அடுத்தடுத்து பிரமாண்ட நாயகர்கள் படத்தில் கமிட்டாகி வருகிறார்!

கியான் விக்ரம் நடிப்பில்  நேற்று கடாரம் கொண்டான் படம் ரிலீசாகி படம் நல்ல வரவேற்ப்பை பெற்று படம் வசூலை ஈட்டி வருகிறது. இவர் அடுத்ததாக ஜமைக்கா நொடிகள் பட இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க விக்ரம் ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்த படத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். இந்த படத்தில் நாயகியாக நடிக்க ப்ரியா பவானி சங்கர் நடிக்க உள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதேபோல பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் தயாராகும் இந்தியன் 2 படத்தில் இவர் நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதிகாரபூர்வ தகவல்கள் இனி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube