நியூசிலாந்தில் நடைபெறவுள்ள பயிற்சி போட்டியில் பிரித்வி ஷா விலகல்.!

  • நாளை  நியூசிலாந்திற்கு இந்திய “ஏ” அணி புறப்பட்டு செல்ல உள்ளனர்.
  • வருகின்ற 17, 19-ம் தேதிகளில் நியூசிலாந்தில் நடக்கும் இரண்டு பயிற்சி ஆட்டத்தில் இருந்து அவர் விலகியுள்ளார்.

நாளை  நியூசிலாந்திற்கு இந்திய “ஏ” அணி புறப்பட்டு செல்ல உள்ளனர். அங்கு நியூசிலாந்து அணியுடன்  இந்திய “ஏ” அணி 3 ஒரு நாள் மற்றும் இரண்டு 4 நாள் போட்டிகளில் விளையாட உள்ளனர்.

இந்நிலையில் இந்திய “ஏ” அணியில்  பிரித்வி ஷா இடம் பெற்றிருந்தார்.ஆனால் பிரித்வி ஷா   தற்போது நடைபெற்றுவரும் ரஞ்சி கோப்பை தொடரில் மும்பை அணிக்காக விளையாடி வருகிறார்.

இவர் கர்நாடகாவுக்கு எதிரான போட்டியின் பீல்டிங்கின் போது இடது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. இதனால் தற்போது   பிரித்வி ஷா பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் சிகிச்சை மற்றும் பயிற்சி முறைகளை மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில் வருகின்ற 17, 19-ம் தேதிகளில் நியூசிலாந்தில் நடக்கும் இரண்டு பயிற்சி ஆட்டத்தில் இருந்து அவர் விலகியுள்ளார். நியூசிலாந்து ஏ அணிக்கு எதிராக போட்டியில்  விளையாடுவாரா ..? என்பது பின்னர் முடிவு எடுக்கப்படும் என இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

author avatar
murugan