ராமர் கோயில் கட்ட தங்கத்தால் ஆன ஒரு செங்கல்..! இளவரசர் யாகூப் ..!

நீண்ட நாள்களாக இழுபறியில் இருந்த அயோத்தி வழக்கின் இறுதி தீர்ப்பை நேற்று வழங்குவதாக உச்சநீதிமன்றம் அறிவித்தது.அதன் படி நேற்று காலை உச்சநீதிமன்றம் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு அயோத்தியில் ராமர் கோவில் கட்ட அனுமதி கொடுத்தது.
மேலும் இஸ்லாமியர்களுக்கு 5 ஏக்கருக்கு மாற்று நிலம் வழங்க வேண்டும் என கூறினர். உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை அனைவரும் வரவேற்றனர்.இந்நிலையில் அயோத்தியில் ராமர் கோயில் கட்டும்  பணியில் இந்துக்களுக்கு இஸ்லாமியர்கள் உதவ வேண்டும் என முகலாய  அரச பரம்பரையை சேர்ந்த இளவரசர் யாகூப் ஹபிபுதீன் டுக்கி கேட்டுக் கொண்டார்.
மேலும் ராமர் கோயில்  கட்டுவதற்காக தங்கத்தால் ஆன ஒரு செங்கல்லை பிரதமர் மோடியிடம்  ஒப்படைப்பதாக கூறினார்.

author avatar
murugan