இன்று பிரதமர் மோடி உரை.. எதிர்பார்ப்பில் மக்கள் !

கொரோனா வைரஸ் காரணமாக  நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து, மத்திய அரசு இரண்டு நாள்களுக்கு முன் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை 3-வது கட்டமாக அறிவித்தது. ஆனால், தமிழகம் உள்பட சில மாநிலங்களில் கொரோனா அதிகரிப்பு காரணமாக ஆகஸ்டு 30-ஆம் தேதி வரை  ஊரடங்கு நீட்டித்துள்ளன.

இந்நிலையில், இன்று மாலை 4.30 மணிக்கு நாட்டு மக்களிடையே உரையாற்றுகிறார். கொரோனா ஊரடங்கு அமல்படுத்தினாலும்,  நீட்டித்தாலும், தளர்வுகள் அளித்தாலும் அது குறித்து பிரதமர் மோடி  மக்களிடையே உரையாற்றி வருகிறார்.

இதற்கிடையில், கொரோனா நிலவரம், சீனா விவகாரம், புதிய கல்விக்கொள்கை , ரஃபேல் போர் விமானங்கள் இந்தியா வருகை , போன்றவை பிரதமர்  உரையில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், இன்றைய பிரதமர் உரை முக்கியம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

author avatar
murugan