நீரின்றி அமையாது உலகு-தண்ணீரின் அவசியத்தை மேற்கோள்காட்டி பிரதமர் மோடி உரை

இன்று நாட்டின் 73-வது சுதந்திர தினம்  கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.இதையொட்டி பிரதமர் நரேந்திர மோடி டெல்லி செங்கோட்டையில்   தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.நாட்டு மக்களுக்கு 73-வது சுதந்திர தின வாழ்த்துக்களை கூறி பிரதமர் மோடி உரையாற்ற தொடங்கினார்.அவரது உரை விவரம் , தியாகிகளின் தியாகத்தை போற்றும் வகையில் கொண்டாடப்படுகிறது சுதந்திர தினம்.

காஷ்மீரில் சுமூக நிலையை கொண்டுவர பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது .நாட்டு மக்கள் எங்கள் மீது வைத்த நம்பிக்கையை நிறைவேற்ற, ஒரு மணித்துளி நேரத்தையும் வீணாக்காமல் செயல்பட்டு வருகிறது மத்திய அரசு.

பொறுப்பேற்ற 10 வாரத்திற்குள்ளாகவே பல முக்கிய முடிவுகளை எடுத்துள்ளது மத்திய அரசு.இஸ்லாமிய பெண்களின் உரிமையை மீட்க முத்தலாக் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது .விவசாயிகளின் நலனுக்கான பல்வேறு நடவடிக்கை, நீர்வளத்தை காக்க ஜல் சக்தி அமைச்சகம் உருவாக்கப்பட்டுள்ளது.

370-வது பிரிவு ரத்து செய்யப்பட்டதன் மூலம் படேலின் கனவு நனவாகி உள்ளது . 2014-ல் பாஜக ஆட்சிக்கு வரும்போது, பல்வேறு சவால்கள் எனக்கு இருந்தன, நாட்டு மக்களின் ஆதரவால் ஒவ்வொரு அடியாக நாங்கள் எடுத்து வைத்தோம்.

மக்களின் அமோக ஆதரவு மூலம் நாட்டில் மாற்றம் கொண்டு வர முடியும். 2019ல் மீண்டும் ஆட்சிக்கு வந்திருப்பது மிகுந்த நம்பிக்கையை தந்துள்ளது.

இஸ்லாமிய பெண்களின் உரிமையை மீட்க முத்தலாக் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. இஸ்லாமிய சகோதரிகள் முத்தலாக்கினால் வாழ்வை அச்சத்துடனேயே கடந்து வந்தனர்.இஸ்லாமிய நாடுகளில் முத்தலாக் ஏற்கனவே தடை செய்யப்பட்டு விட்டது.ஆனால் இந்தியாவில் முத்தலாக் தடை கொண்டு வர தாமதம் ஏன் என புரியவில்லை.சுயமரியாதையுடன் கூடிய முன்னேற்ற பாதையில் நாடு சென்று கொண்டு இருக்கிறது.

காஷ்மீர் விவகாரத்தில் மக்கள் எனக்கு அளித்த கட்டளையை நிறைவேற்றி உள்ளேன், காஷ்மீர் விவகாரத்தில் முந்தைய அரசுகள் எடுத்த நடவடிக்கைகள் தோல்வி அடைந்தன.கடந்த 70 ஆண்டுகளாக 370-வது பிரிவு தீவிரவாதத்தை வளர்த்தது.ஆதிவாசிகளுக்கு மற்ற மாநிலங்களில் கிடைத்த உரிமைகள் அங்கு கிடைக்கவில்லை.

370, 35ஏ பிரிவினால் காஷ்மீர் மக்களின் முன்னேற்றத்திற்கு பல தடைகள் இருந்தன.கடந்த 70 ஆண்டுகளாக காஷ்மீர் மக்களின் கனவுகள் நசுக்கப்பட்டு வந்தன. காஷ்மீரில் வசிக்க நினைப்பவர்களுக்கு போதிய உரிமைகள் கிடைக்கவில்லை.

370-வது பிரிவு நீக்கம் பற்றி எதிர்க்கட்சிகள் விமர்சித்து வந்தன, 370வது பிரிவை இத்தனை ஆண்டுகளாக நீக்காதது ஏன்? என எதிர்க்கட்சிகளை பார்த்து காஷ்மீர் மக்கள் கேட்கின்றனர்.

ஜி.எஸ்.டி ஒரே நாடு ஒரே வரி மூலம் கனவுகள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன.நாட்டின் முன்னேற்றத்திற்காக இன்னும் பல புதிய முயற்சிகளை எடுக்கிறது, மத்திய அரசு.

முன்னேற்றத்தை அடைய வேண்டுமென்றால் வறுமை ஒழிக்கப்பட வேண்டும். மோடி வறுமையில் உள்ளவர்கள் சவால்களை சமாளிக்கும் வழிகளை அறிந்தவர்கள்.இன்றளவும் தண்ணீர் வசதி இல்லாத வீடுகள் உள்ளன, நீண்ட தூரம் நடந்து சென்று தண்ணீர் கொண்டு வரும் நிலைதான் உள்ளது.

மேலும்  நீரின்றி அமையாது உலகு என்ற குறளை எடுத்துக் கூறி தண்ணீரின் அவசியத்தை வலியுறுத்தினார் மோடி . பல வருடங்களுக்கு முன் ஜெயின் முனிவர் தண்ணீர் விற்பனை செய்யப்படும் என்றார், அவரின் வாக்கு இப்போது பலித்துக் கொண்டு இருக்கிறது.

நீர் பிரச்சினை தீர்க்க ஜல் ஜீவன் மிஷன் என்ற புதிய திட்டத்தை அறிவிக்கிறேன்.ஜல் ஜீவன் மிஷன் திட்டத்திற்கு போதிய நிதியும் ஒதுக்க திட்டமிட்டுள்ளோம் . தண்ணீரின் அவசியம் – இளம் தலைமுறைக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.