அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையின் புரட்சி இருந்தால் தான் நமது நாட்டின் வளர்ச்சி பிரதமர் மோடியின் கருத்து.!

  • பெங்களூருவில் உள்ள வேளாண் அறிவியல் பல்கலைகழகத்தில் 107-வது இந்திய அறிவியல் மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
  • அதில் மோடி பேசுகையில், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையின் வெற்றியில் தான் நமது நாட்டின் வளர்ச்சி இருக்கிறது என்று குறிப்பிட்டார்.

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள வேளாண் அறிவியல் பல்கலைகழகத்தில் 107-வது இந்திய அறிவியல் மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். பிறகு பிரதமர் மோடி பேசுகையில், வான்வெளி ஆராய்ச்சியில் சாதனை புரிந்து வருவது போல் நாம், ஆழ்கடல் பற்றிய ஆராய்ச்சியையும் மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்தார். பின்னர் விவசாயத்தில் உள்ள பல்வேறு பிரச்னைகளுக்கும், நாடு முழுவதும் சுத்தமான குடிநீர் விநியோகம் செய்வதற்கும், தொழில்நுட்ப ரீதியாக தீர்வு காண வேண்டும் எனவும் மோடி அறிவுறுத்தினார்.

அதனை தொடர்ந்து கூறுகையில், நாட்டில் தொழில்நுட்ப வளர்ச்சியினால் ஆன்லைன் வணிகம், மொபைல் பேங்கிங் உள்ளிட்ட சேவைகள் கிராம புறங்களில் பரவி உள்ளது என்றும், இடைத்தரகர்கள் இன்றி விவசாயிகள் நேரடியாக ஆன்லைன் சந்தையில் விற்பனை செய்கின்றனர் என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார். மேலும் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையின் வெற்றியில் தான் நமது நாட்டின் வளர்ச்சி இருக்கிறது என்று மோடி குறிப்பிட்டார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்