பீகாரில் நெடுஞ்சாலை திட்டங்களுக்கு நாளை அடிக்கல் நாட்டும் பிரதமர் மோடி.!

பீகாரில் நெடுஞ்சாலை திட்டங்களுக்கு நாளை அடிக்கல் நாட்டும் பிரதமர் மோடி.!

பீகாரில் 9 நெடுஞ்சாலை திட்டங்களுக்கு நாளை பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார்.

பிரதமர் நரேந்திர மோடி நாளை காணொளி காட்சி மூலம் பீகாரில் ஒன்பது நெடுஞ்சாலை திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவுள்ளார். மேலும், ஆப்டிகல் ஃபைபர் இணைய சேவைகளை தொடங்கி  வைப்பார். இதன் மூலம் மாநிலத்தின் 45,945 கிராமங்களும் இணைக்கப்படும் என்று பிரதமர் அலுவலகம் நேற்று தெரிவித்துள்ளது.

இந்த ஒன்பது நெடுஞ்சாலைத் திட்டங்களில் சுமார் 350 கிலோமீட்டர் நீளமுள்ள சாலையை ரூ. 14,258 கோடி செலவில் அமைக்கப்படவுள்ளது. அக்டோபர்-நவம்பர் மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் நெருங்குகின்ற மாநிலத்தில் ரயில்வே, பாலங்கள், குடிநீர் மற்றும் சுகாதாரம் உள்ளிட்ட பல மேம்பாட்டுத் திட்டங்களுக்கு மோடி அன்மையில் அடிக்கல் நாட்டினார்.

பீகாரின் குறிப்பிடத்தக்க உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கான சிறப்பு தொகுப்பை மோடி 2015 ஆம் ஆண்டில் அறிவித்தது குறிப்பிடத்தக்கது. இந்த தொகுப்பில் ரூ .54,700 கோடி மதிப்புள்ள 75 திட்டங்கள் அடங்கியுள்ளது. அவற்றில் 13 திட்டங்கள் நிறைவடைந்துள்ளன. மேலும், 38 பணிகள் நடைபெற்று வருகின்றன, மற்றவை தொடங்கப்பட உள்ளது என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.
Join our channel google news Youtube