தேநீர் கொண்டு வந்த ஹரிவன்ஷைப் பாராட்டிய பிரதமர் மோடி..!

தேநீர் கொண்டு வந்த ஹரிவன்ஷைப் பாராட்டிய பிரதமர் மோடி..!

விவசாய சீர்திருத்த மசோதா தொடர்பான கலந்துரையாடலின் போது, ​​சபையில் சலசலப்பை ஏற்படுத்தியதற்கும், துணை சபாநாயகருடன் தவறாக நடந்து கொண்டதற்கும் அவர்களை சபாநாயகர் வெங்கையா நாயுடு ஞாயிற்றுக்கிழமை இடைநீக்கம் செய்தார்.

மாநிலங்களவையில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட 8 எம்.பி.க்கள் நேற்றிரவு முதல் காந்தி சிலைக்கு முன்னால் ஒரு தர்ணாவில் ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து, இன்று துணைத் தலைவர் ஹரிவன்ஷ் இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.பி.க்களுக்கு தேநீர் கொண்டு வந்தார். ஆனால், அவர் கொண்டு வந்த தேநீரை எம்.பிக்கள் குடிக்க  மறுத்தனர். விளம்பரத்திற்காக ஹரிவன்ஷ் இவ்வாறு நடந்து கொள்கின்றனர் என விமர்சித்தனர். இந்நிலையில், பிரதமர் மோடி மாநிலங்களவையின்  துணைத் தலைவர் ஹரிவன்ஷைப் பாராட்டியுள்ளார். பிரதமர் மோடி ட்வீட் மூலம் பல நூற்றாண்டுகளாக, பீகார் மாபெரும் நிலம் எங்களுக்கு ஜனநாயகத்தின் மதிப்புகளை கற்பிக்கிறது. அந்த அற்புதமான நெறிமுறைகளுக்கு ஏற்ப, பீகாரைச் சேர்ந்த எம்.பி. மற்றும் மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் ஜி  தன்னை அவமதித்த எம்.பிக்களுக்கு தேநீர்  வழங்க முன்வந்தது அவரது பெருந்தன்மையை காட்டுகிறது என்று கூறியுள்ளார்.  

Latest Posts

மாலை வரை சென்னையில் மழை நீடிக்கும் - தமிழ்நாடு வெதர்மேன்
பாலாவுக்கு குடை பிடிக்கும் ஷிவானி.... என்னடா நடக்குது இங்க?
#Breaking: 22 இடங்களில் வருமானவரித்துறை சோதனை.. ரூ.5 கோடி பறிமுதல்!
2021 - ல் "ருத்ரனாக" மிரட்ட காத்திருக்கும் லாரன்ஸ்....! #HappyBirthdayRaghavaLawrence
கேரள தங்க கடத்தல் வழக்கு : சிவசங்கரனை  7 நாட்கள் காவலில் வைக்க உத்தரவு
பிரசவ வலிக்கு பயந்து தீக்குளித்த 5 மாத கர்ப்பிணி!
கல்லூரி கல்வி இயக்குநர் பூரணசந்திரன் நியமனம் ரத்து -உயர்நீதிமன்றம் உத்தரவு
ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகும் சூர்ய குமார் யாதவ்... காரணம் இதுதானா..?
நாத்தனாருக்கு தெரியவந்த கள்ளக்காதல் - கொலை செய்துவிட்டு நாடகமாடிய அண்ணி!
எச்சரிக்கை: இது அடர்த்தியான மழை.. பாதுகாப்பாக வாகனம் ஓட்டுங்கள்! - தமிழக வெதர்மேன்