விஞ்ஞானிகளை பாராட்டிய பிரதமர் மோடி “நீங்கள் இந்தியாவை பெருமைப்படுத்தியுள்ளீர்கள்”

விஞ்ஞானிகளை பாராட்டிய பிரதமர் மோடி “நீங்கள் இந்தியாவை பெருமைப்படுத்தியுள்ளீர்கள்”

அதிகாலை 1.30 மணி விக்ரம் லேண்டரை நிலவின் தென்துருவத்தில் மிகவும் மெதுவாக  தரையில் இறக்க இஸ்ரோ விஞ்ஞானிகள் சமிக்ககளை அனுப்பினர் அதனை விக்ரம் லேண்டர் ஏற்றுக்கொண்டது.2.1 கிலோ மீட்டர் தொலைவில் இருந்த போது விக்ரம் லேண்டரின் சமிக்கை அனுப்புவதை நிறுத்திக்கொண்டது .

இந்த நிகழ்வை பார்வையிட வந்த பிரதமர் நரேந்திர மோடி விக்ரம் லேண்டருடன் தொடர்பு இழந்த பின்னர் விஞ்ஞானிகளின் முகங்கள் வாடியிருப்பதை கண்டு   விஞ்ஞானிகளை தைரியமாக இருக்கும்படியும்  அவர் விஞ்ஞானிகளுக்கு  தான் ஆதரவளிப்பதாகவும் அவர்களிடம் கூறினார்.

“வாழ்க்கையில் அதன் ஏற்ற தாழ்வுகள் உள்ளன. நீங்கள் அடைந்திருப்பது ஒரு சிறிய சாதனையல்ல” என்று பிரதமர் மோடி கூறினார்.

பிரதமர் மோடி இஸ்ரோ விஞ்ஞானிகளைப் பாராட்டி தைரியமாக இருக்கும்படி கூறினார். “நீங்கள் இந்தியாவை பெருமைப்படுத்தியுள்ளீர்கள். நீங்கள் உலகத்திற்கும், மனிதநேயத்திற்கும், அறிவியலுக்கும் சேவை செய்துள்ளீர்கள்” என்று பிரதமர் கூறினார்.

author avatar
Dinasuvadu desk
Join our channel google news Youtube