டியூப் லைட்கள் இப்படித்தான் வேலை செய்யும்-ராகுல் காந்தியை விமர்சித்த பிரதமர் மோடி

டியூப் லைட்கள் இப்படித்தான் வேலை செய்யும் என்று ராகுல் காந்தியை மறைமுகமாக

By venu | Published: Feb 07, 2020 10:44 AM

டியூப் லைட்கள் இப்படித்தான் வேலை செய்யும் என்று ராகுல் காந்தியை மறைமுகமாக விமர்சித்துள்ளார் பிரதமர் மோடி.  குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது  மக்களவையில் நேற்று விவாதம் நடைபெற்றது. அப்பொழுது பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.அவர் பேசுகையில், காந்தி காந்தி என்று எதிர்க்கட்சி எம்பிக்கள் முழக்கங்களை எழுப்பினார்கள். இதற்கு பதில் அளித்த பிரதமர் மோடி, மகாத்மா காந்தி உங்களுக்கு டிரெய்லராக இருக்கலாம் ஆனால் எங்களுக்கு உயிர்மூச்சு என்று பேசினார். மேலும் அவர் பேசுகையில், எந்த மத நம்பிக்கை கொண்டவரையும் குடியுரிமை திருத்தச் சட்டம் பாதிக்காது.நாங்கள் மக்களை இந்தியர்களாக பார்க்கிறோம். ஆனால் எதிர்க்கட்சிகள் மக்களை அவரவர்களின் மத நம்பிக்கையி‌ன் அடிப்படையில் அணுகுகின்றனர் என்று கூறினார். பிரதமர் மோடி பேசிக் கொண்டிருந்தபோது காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குறுக்கிட்டார். அப்பொழுது பிரதமர் மோடி பேசுகையில் , நான் 30 நிமிடங்களாக பேசி வருகிறேன். இப்போது தான் அங்கு மின்சாரம் பாய்ந்துள்ளது. டியூப் லைட்கள் இப்படித்தான் வேலை செய்யும் என்று ராகுல் காந்தியை மறைமுகமாக விமர்சித்துள்ளார் பிரதமர் மோடி.
Step2: Place in ads Display sections

unicc