இஸ்லாமியர்களுக்கு ரம்ஜான் வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி.!

நாடு முழுவதும் இன்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடுவதையொட்டி இஸ்லாமிர்களுக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி.

நாடு முழுவதும் இன்று மே 25 ரம்ஜான் பண்டிகை சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. ரம்ஜான் பண்டிகை கொண்டாடுவதையொட்டி இஸ்லாமிர்களுக்கு வாழ்த்து தெரிவித்து பிரதமர் மோடி ட்விட்டர் பக்கத்தில் ரம்ஜான் பண்டிகையால் இரக்கம், சகோதரத்துவம், நல்லிணக்கம் அதிகரிக்கட்டும் என இஸ்லாமியர்கள் அனைவருக்கும் ரம்ஜான் வாழ்த்து தெரிவித்தார். மேலும், இந்நாளில் அனைவரும் ஆரோக்கியமாகவும், வளமாகவும் மகிழ்ச்சியுடன் வாழ ஆண்டவனை வேண்டுகிறேன் என்று பதிவிட்டுள்ளார். 

இதற்குமுன் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், ரமலான் திருநாள் அன்பு சகோதரத்துவம், அமைதி மற்றும் நல்லிணக்கத்தின் அடையாளம். தனிநபர் இடைவெளியை பின்பற்றி பண்டிகையை கொண்டாடுங்கள் எனக் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்