குடல் புண் ஏற்படாமல் தடுக்க வேண்டுமா? அப்ப இதை பண்ணுங்க!

இன்று சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமே குடல்புண் ஏற்படுகிறது. இதனை தடுப்பதற்கு நாம் என்னென்ன செய்ய வேண்டும் என்பது பற்றி தற்போது பார்ப்போம். 

காலை உணவு 

இயந்திரம் போன்று வேகமாக இயங்கி கொண்டிருக்கும் உலகில், மனிதனும் ஒரு இயந்திரத்தை போன்றே செயல்படுகின்றான். இதனால், பலரும் காலை உணவை மறந்து விடுகின்றனர். எனவே குடல்புண்ணிலிருந்து விடுபட, காலை உணவை தவிர்க்காமல், சரியான நேரத்திற்கு உண்ண வேண்டும். 

நேரம் தவறாமை 

நாம் நம்முடைய மற்ற கடமைகளில் நேரம் தவறாமல் செயல்படுவது போல, உணவு உண்பதிலும் நேரம் தவறாமையை கையாள வேண்டும். இவ்வாறு செயல்பட்டால், நாம் நமது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதுடன், குடல் புண் ஏற்படாமலும் பாதுகாக்கலாம். 

பழங்கள் 

நாம் நமது அன்றாட வாழ்வில், நாகரீகம் என்னும் பெயரில், பல வகையான மேலை நாட்டு உணவுகளை விரும்பி உண்கின்றோம் அவகையால் தவிர்த்து, அதிகமாக பழ வகைகளை உண்பதை வழக்கமாக கொள்ள வேண்டும். 

காய்கறிகள் 

நம்மில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை உணவில் காய்கறிகள் என்ரால் ஒதுக்கி வைத்து விட்டு தான் சாப்பிடுகிறோம். எனவே நமக்கு குடற்புண் ஏற்படாமல் இருக்க வேண்டுமென்றால், உணவில் காய்கறிகளை ஒதுக்காமல் சாப்பிட வேண்டும். 

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.