மகாத்மா காந்தி நினைவிடத்தில் அதிபர் ட்ரம்ப் மலர்தூவி மரியாதை.!

  • டெல்லி ராஜ்காட்டில் உள்ள காந்தி நினைவிடத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அவரது மனைவியுடன் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இன்று குடியரசுத் தலைவர் மாளிகைக்கு வருகை தந்த அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்புக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, அமைச்சர்கள் வரவேற்றனர். குடியரசுத் தலைவர் மாளிகைக்கு வருகை தந்த அதிபர் ட்ரம்புக்கு முப்படை அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து  டெல்லி ராஜ்காட்டில் உள்ள காந்தி நினைவிடத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப், அவரது மனைவியுடன் மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்நிலையில் காந்தி நினைவிடத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டது என்பது குறிப்பிடப்படுகிறது. இதையடுத்து அதிபர் ட்ரம்ப் மற்றும் பிரதமர் மோடி ஐதராபாத் இல்லத்துக்கு சென்றனர். இங்கு இரு நாட்டை குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளது.

இதனிடையே அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்  2 நாள் அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ளார். டிரம்ப்பிற்கு கலை நிகழ்ச்சிகளுடன் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து அகமதாபாத்தில் உள்ள சபர்மதி ஆசிரமத்தை டிரம்ப் பார்வையிட்டார். அதனைத் தொடர்ந்து மோதிரா விளையாட்டு மைதானத்தில் நமஸ்தே டிரம்ப் என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். பின்னர் அங்கிருந்து ஆக்ரா சென்றார் டிரம்ப், அங்கு அவர், மனைவி மெலானியாவுடன் தாஜ்மகாலை சுற்றிப்பார்த்தனர். இறுதியாக நேற்று இரவு டெல்லியில் உள்ள தனியார் விடுதிக்கு சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்