கொரோனாவுக்கு எதிராக தயாரிப்பு முயற்சிகள் –   உலக சுகாதார அமைப்பு

கொரோனாவுக்கு எதிராக 102 தடுப்பூசி தயாரிப்பு முயற்சிகள் நடைபெற்றுள்ளதாக  உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

சீனாவில் உள்ள வுகான் நகரில் கடந்த டிசம்பர் மாத இறுதியில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது சீனாவில் இருந்து உலகில் உள்ள பல நாடுகளில் பரவியுள்ளது .உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு வருகிறது.உலகம் முழுவதும் தற்போதைய நிலவரப்படி,சுமார் 33 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு  கொரோனா வைரஸ் பரவியுள்ளது.கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 10 லட்சத்து 37 ஆயிரத்தை கடந்துள்ளது. இதுவரை இந்த வைரஸ் தாக்குதலுக்கு 2 லட்சத்து 33 ஆயிரத்து 708 பேர் உயிரிழந்துள்ளனர். ஆனாலும், வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 10 லட்சத்து 37 ஆயிரத்து 926 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இந்த புதிய வகை வைரசுக்கு தடுப்பு மருந்து ஏதும் இல்லை. அதனால் இந்த வைரசுக்கு உலகில் உள்ள அனைத்து மருத்துவர்களும் தடுப்பு மருந்து கண்டுபிடிக்க தீவிர முயற்சியில் ஆய்வு செய்து வருகின்றனர்.

இந்நிலையில் கொரோனாவுக்கு எதிராக 102 தடுப்பூசி தயாரிப்பு முயற்சிகள் நடைபெற்றுள்ளதாக  உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.அவற்றுள் 8 தடுப்பூசிகள் கொரோனாவை எதிர்த்து செயல்படும் என்று நம்பக்கூடிய நிலையில் மருத்துவ பரிசோதனைக்கு அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.