வேலைக்கு செல்லும் கர்ப்பிணி பெண்கள் கடைபிடிக்க வேண்டியவை

பெண்களாகிய நமது வாழ்நாட்களில் முக்கிய நாட்களாக விளங்குவது கர்பகாலமாகும்.இந்தநாட்களில் நம் சாப்பிடக்கூடிய உணவுகள் நமது குழந்தையின் உடல் நலன் சிறக்க உதவும். இந்த காலகட்டத்தில் நமது எண்ணங்களும் செயல் முறைகளையும் நமது குழந்தைகளிடத்தில் இருக்குமாம்.

எனவே இந்த கால கட்டத்தில் நாம் செய்யும் செயல்களும்,சாப்பிடக்கூடிய உணவுகளும் மிகவும் கருத்தில் கொள்ள வேண்டியவை. இன்றைய நவீன கால கட்டத்தில் பெண்கள் கர்ப்பகாலத்தில் வேலைக்கு செல்வது மிகவும் சாதாரண ஒன்றாகிவிட்டது.

அந்த காலத்தில் வேலைக்கு செல்லும் பெண்கள் கருத்தில் கொள்ள வேண்டிய சில விஷயங்களை இந்த பதிப்பில் இருந்து படித்தறியலாம்.

சத்தான உணவு :

 

வேலைக்கு செல்லும் கர்ப்பிணி பெண்கள் சத்தான உணவு எடுத்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியமாகும்.சிலர் வேலைக்கு  செல்லும் போதும் நேரம் தாமதமாகி விட்டது என்று காலை உணவுகளை உண்ணாமல் வேலைக்கு சென்று விடுவார்கள். மிகவும் தவறு. கர்ப்பிணி பெண்களுக்கு காளி உணவு மிகவும் அவசியம்.

எனவே அதனை தவிர்க்க கூடாது.காலைஉணவில்  கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.மேலும் கர்ப்பிணி பெண்கள் இடைவெளி கிடைக்கும் போதெல்லாம் ஏதாவது உணவுகளை சாப்பிடுவது மிகவும் நல்லது. அதாவது அலுவலங்களுக்கு போகும் போது இடையே சாப்பிட வேர்க்கடலை வெண்ணெய், வேக வைத்த முட்டை, சீஸ், பழங்கள் முதலியவற்றை எடுத்து செல்வது மிகவும் நல்லது.

ரெஸ்ட் தேவை :

அலுவலங்களில் வேலை பார்க்கும் போது சிறிது இடைவெளி விட்டு ஓய்வெடுத்து விட்டு வேலை செய்வதால் பல பிரச்சனைகள் நீங்கும்.வேலை பளுவினால் ஏற்படும் மன அழுத்தங்கள் நீங்கும்.

மாத்திரைகள் அவசியம்:

கர்பகாலங்களில் மாத்திரைகள் எடுத்து கொள்வது மிகவும் அவசியமாகும்.இந்த காலங்களில் நேரம் தவறாமல் சாப்பிட்டு விட்டு மாத்திரைகளை எடுத்து கொள்வது மிகவும் அவசியமாகும்.சிலர் வேலைப்பளு காரணமாக மாத்திரைகளை உட்கொள்ளாமல் இருந்து விடுவார்கள்.

உடற்பயிற்சி:

 

உடற்பயிற்சி செய்வதால் மனஅழுத்தம் நீங்கி உடல் புத்துணர்ச்சி அடையும்.எனவே கர்ப்பகாலத்தில் உடற்பயிற்சி மிகவும் முக்கியமாகும். நடைப்பயிற்சியும் மிகவும் அவசியம்.கர்பகாலங்களில் அதிக நேரம்  நிற்க கூடாது.

பாதுகாப்பான பயணம் :

கர்ப்பகாலத்தில் வேலைக்கு செல்லும்  பெண்கள் பாதுகாப்பான பயணங்களை மேற்கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். இந்த காலங்களில் பெண்களை குழந்தையின் நலனை கருத்தில் கொண்டு பயணம் மேற்கொள்வது மிகவும் அவசியம்.

தண்ணீர்:

கர்ப்பகாலத்தில் பெண்கள் அதிகமாக தண்ணீர் எடுத்துக்கொள்ளது மிகவும் நன்மை தரும்.குறிப்பாக உடலில் சோர்வுகள் ஏற்படும் போதெல்லாம் ஜூஸ் குடிப்பது மிகவும் நன்மை தரும்.

மது பழக்கம் :

 

கர்ப்பமாக இருக்கும் போது  பெண்கள் மது அருந்துவது குழந்தையின் உடல்நலனை பாதிக்கும். மேலும் புகைபிடிக்கும் பழக்கங்களும் கூடாது.அது குழந்தையின் உடல் நலனை பாதிக்கும்.

ஆழ்ந்த உறக்கம் :

 

 

கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்கு இரவு நேரங்களில் ஆழ்ந்த தூக்கம் மிகவும் முக்கியம். இது குழந்தையின் உடலில் இரத்த ஓட்டத்தை சீராக வைக்க உதவும். குழந்தையின் உடல் நலத்திற்கும் நன்மையை தரும். மேலும்  கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்கும் தூக்கம் மிகவும் முக்கியம்.கர்பகாலங்களில் நேரம்  கிடைக்கும் போதெல்லாம் சற்று ஒய்வு எடுத்த கொள்ளுங்கள்.

 

Leave a Comment