கர்ப்பிணிகளுக்கு தனி கவனம்.! அவசர அழைப்புக்கு 102 மற்றும் 104-ஐ அழைக்கலாம்.!

கொரோனா தடுப்பு முன்னெச்செரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு கடுமையாக அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நேரத்தில் மக்கள் தங்கள் அன்றாட தேவைகளுக்கு மட்டும் வெளியில் வர அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, கர்ப்பிணி பெண்கள் நலன் குறித்து முக்கிய தகவலை கூறியுள்ளார். அதன்படி, வரும் 2 மாதங்களில் சுமார் 1.5 லட்சம் கர்ப்பிணிகள் பிரசவிக்க உள்ளனர். அவர்களின் உடல்நலன் குறித்து மருத்துவ அலுவலர்கள் தனி கவனம் செலுத்தவேண்டும் எனவும், மேலும், கர்ப்பிணிகள் அவரச அழைப்புகளாக 102 மற்றும் 104 ஆகியவற்றை தொடர்பு கொண்டு தேவையான உதவிகளை பெற்று கொள்ளலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.  

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.