ஒடிசா சென்ற சிறப்பு ரயிலில் கர்ப்பிணிக்கு பிரசவ வலி.!

தெலுங்கானாவில் இருந்து சிறப்பு ரயில் மூலம் ஒடிசா சென்ற இளம் கர்ப்பிணிக்கு செல்லும் வழியிலேயே பிரசவ வலி ஏற்பட்டு குழந்தை பிறந்துள்ளது. 

தற்போது ஊரடங்கு காரணமாக ரயில் பொது போக்குவரத்துக்கு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. சரக்கு ரயில்கள் மற்றும் புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர் செல்ல சிறப்பு ரயில்கள் மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன. 

அதன் படி, ஒடிசா மாநிலத்தில் உள்ள தங்கள் சொந்த ஊருக்கு செல்ல நிறைமாத இளம் கர்ப்பிணி பெண் தெலுங்கானாவில் இருந்து புறப்பட்ட சிறப்பு ரயில் மூலம் சென்றார். 

செல்லும் வழியில்அந்த பெண்ணிற்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதனால், அந்த சிறப்பு ரயில் பாலங்கீர் எனுமிடத்தில் நிறுத்திவைக்கப்பட்டு, அங்குள்ள மருத்துவமனையில் பெண்ணிற்கு பிரசவம் பார்க்கப்பட்டது. அங்கு அவருக்கு குழந்தை பிறந்துள்ளது. தற்போது தாயும் சேயும் நலமாக உள்ளனர். 

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.