முகத்தில் நாய் கடித்தவருக்கு ஒட்டுறுப்பு சிகிச்சை அளித்து முண்டியம்பாக்க மருத்துவர்கள் சாதனை!

நாய்க்கடிக்கு ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை செய்து முண்டியம்பாக்கம் மருத்துவர்கள் சாதனை புரிந்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் மாம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் தான் 45 வயதான தொழிலாளி கோவிந்தன். இவர் கடந்த ஏப்ரல் 30ஆம் தேதி வீட்டில் படுத்து தூங்கிக் கொண்டிருந்த போது, அவரது முகத்தில் நாய் கடித்துவிட்டது. உதடு மூக்கு ஆகியவை முற்றிலுமாக சிதைந்து நிலையில் இருந்துள்ளது. இதனையடுத்து முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டிருந்தார்.

முதலுதவி மற்றும் நாய்க்கடிக்கு தடுப்பு மருந்தை கொடுத்து, கொரோனா  வைரஸ் பரிசோதனையும் செய்த பின்பு இரண்டு மூன்று கட்டமாக அவருக்கு தோல் மற்றும் தசை மாற்று உறுப்பு அறுவை சிகிச்சை நெற்றிப் பகுதியில் சதை எடுத்து மூக்கின் இடது பகுதி வரை நடத்தப்பட்டுள்ளது. மேலும் உதடு சரி செய்யும் பணியும் நடந்துள்ளது. 35 நாட்களாக அறுவை சிகிச்சைக்குப் பிறகு நலமுடன் எவ்வித பாதிப்புமின்றி கோவிந்தன் வீடு திரும்பியுள்ளார்.இதனால் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சை செய்த மருத்துவர்களுக்கு பாராட்டு குவிந்து வருகிறது.

author avatar
Rebekal