பருவமழையையொட்டி முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் தீவிரம் – அமைச்சர் உதயகுமார்

பருவமழையையொட்டி முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது என்று அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.

சென்னையில் அமைச்சர் உதயகுமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.அப்பொழுது அவர் பேசுகையில்,  பருவமழையையொட்டி முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது . புயல் பாதிக்கும் 4399 இடங்களில் மண்டல குழுக்கள் அமைக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது.மருத்துவமனைகளில் தேவையான உயிர்காக்கும் இயந்திரங்கள் தயார் நிலையில் உள்ளது.

மருத்துவமனைகளுக்கு தேவையான மின் வசதிகளும் செய்து தரப்படும்.டெல்டா பகுதிகளில் நிரந்தர புயல் பாதிப்பு மையங்கள் உள்ளன.எண்ணெய் நிறுவனங்கள் ஸ்டாக்குகளை போதுமான அளவு வைத்திருக்க வேண்டும்.

வெள்ளத்தில் கால்நடைகள மீட்பதற்கு 8624 மீட்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.  உலகளாவிய அளவில் தமிழக அரசின் பேரிடர் மேலாண்மை செயல்பாட்டுக்கு பாராட்டு கிடைத்துள்ளது . ஏரிகளை தூர்வாருதல், நீர்நிலைகளை பராமரித்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள முதலமைச்சர் பழனிசாமி  உத்தரவு பிறப்பித்துள்ளார் என்றும் தெரிவித்துள்ளார்.