புகழேந்தி 24-ம் புலிகேசியாய் உருவாகி இருக்கிறார்- தினகரன்

புகழேந்தி 24-ம் புலிகேசியாய் உருவாகி இருக்கிறார் என்று அமமுக பொதுச்செயலாளர்

By venu | Published: Oct 25, 2019 09:23 PM

புகழேந்தி 24-ம் புலிகேசியாய் உருவாகி இருக்கிறார் என்று அமமுக பொதுச்செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார். இன்று சேலத்தில் முதலமைச்சர் பழனிசாமியை புகழேந்தி சந்தித்தார்.இந்த நிலையில் இது குறித்து அமமுக பொதுச்செயலாளர் தினகரன் கூறுகையில்,  கத்தரிக்காய் முத்தினால் சந்தைக்கு வந்துதானே ஆக வேண்டும். புகழேந்தி 24-ம் புலிகேசியாய் உருவாகி இருக்கிறார். அவர் அ.தி.மு.க.வில் இருக்கிறாரா? அ.ம.மு.க.வில் இருக்கிறாரா என்று கேள்வி எழுப்பினார். மேலும் சிறையிலிருந்து சசிகலா விரைவில் வெளியே வருவார், அதற்கான சட்டரீதியான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம் என்று  தினகரன் தெரிவித்துள்ளார்.
Step2: Place in ads Display sections

unicc