கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு அறிவித்த பிரக்யான் ஓஜா .!

  • இடது கை சுழற்பந்து வீச்சாளர் பிரக்யான் ஓஜா அனைத்து விதமான போட்டிகளில்

By Fahad | Published: Apr 02 2020 01:07 PM

  • இடது கை சுழற்பந்து வீச்சாளர் பிரக்யான் ஓஜா அனைத்து விதமான போட்டிகளில் இருந்து  ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
  • கடைசியாக கடந்த 2013-ம் ஆண்டு  வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடி உள்ளார்.
இந்திய அணியின் இடது கை சுழற்பந்து வீச்சாளர் பிரக்யான் ஓஜா அனைத்து விதமான போட்டிகளில் இருந்து  ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.இவர்  24 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 113 விக்கெட்டுகளை பறித்து உள்ளார். மேலும் 18 -ஒருநாள் போட்டிகளில் விளையாடி 21 விக்கெட்டுகளையும் , 6 டி 20 போட்டிகளில்  விளையாடி 10 விக்கெட்டுகளையும் எடுத்துள்ளார். இவர் கடைசியாக கடந்த 2013-ம் ஆண்டு  வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடி உள்ளார்.அதன்பின் இந்திய அணிக்காக விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

More News From announces retirement