பொள்ளாச்சி பாலியல் விவகாரம் – விவரம் தெரிந்த பொதுமக்களும் புகார் கொடுக்கலாம்!! – சிபிசிஐடி!!

பொள்ளாச்சியில் கடந்த 7 ஆண்டுகளாக 200க்கும் மேற்பட்ட பெண்கள் குறிப்பாக பள்ளி கல்லூரி பெண்களை காதல் மற்றும் நட்பு வலையில் வீழ்த்தி பணம் நகை பறிப்பு மற்றும் பாலியல் வன்முறைகளில் ஈடுபட்டு வந்த கும்பலில் நான்கு நபர்களை சில தினங்களுக்கு முன்பு காவல்துறை கைது செய்தது.

அப்போது நடத்தப்பட்ட விசாரணையில் இக்கும்பலில் 20க்கும் மேற்பட்ட நபர்கள் உள்ளதாக தெரிய வந்துள்ளது. மேலும் இதில் முக்கிய குற்றவாளியாக பார்க்கப்படும் திருநாவுக்கரசு கைதாவதற்கு முன்பு வெளியிட்ட வீடியோ ஒன்று பல அரசியல் பிரபலங்கள் இதில் சம்பந்தப்பட்டுள்ளதாகவும் அவர்கள் அனைவரையும் நாம் எப்பாடுபட்டாவது வெளியே கொண்டு வருவேன் என்றும் பேசியிருந்தார்.

கைது செய்யப்பட்டு அவர்களின் செல்போன்களில் இருந்து சுமார் 1500க்கும் மேற்பட்ட பாதிக்கப்பட்ட பெண்களின் ஆபாச வீடியோக்களை கைப்பற்றியது காவல்துறை.

ஆளுங்கட்சியின் மேல் தொடர்ந்து புகார் வைக்கப்பட்டாலும் எங்களுக்கும் இந்த விவகாரத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என தொடர்ந்து மறுத்துக் கொண்டே வருகிறது ஆளுங்கட்சி தரப்பு.

இதுகுறித்து தேசிய மகளிர் ஆணையம் தலைவர் ரேகா சர்மா தமிழ்நாடு டிஜிபி டி கே  ராஜேந்திரனுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு விசாரணையை துரிதப்படுத்தி விரைவில் நீதி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

இதன் எதிரொலியாக, வழக்கை சிபிஐக்கு மாற்றி, விசாரணையை துரிதப்படுத்தவும் இந்த கொடுங்குற்றத்தின் பின்னணியில் இருப்பவர்கள் யார் என்பதை அறியவும் அரசாணையை வெளியிட்டது தமிழக அரசு.

இந்த குற்றத்தை கையில் எடுத்ததும், முதற்கட்டமாக திருநாவுக்கரசு வீட்டில் சிபிசிஐடி சோதனை நடத்தியது. அதேபோல, சம்மந்தப்பட்ட அனைவரின் வீடுகளும் சோதனைக்கு உட்படுத்தப்படும் எனவும் தெரிவித்தது.

அதை தொடர்ந்து, இந்த சம்பவம் குறித்து அறிந்த பொது மக்களும் புகார் அளிக்கலாம். நேரில் வந்து புகார் அளிப்பவர்களின் ரகசியம் காக்கப்படும் எனவும் தெரிவித்தது.

Related Posts

Next Post

Leave a Reply

Your email address will not be published.