ஸ்டெர்லைட் ஆலைக்கு உடனடியாக மின் இணைப்பு வழங்க உத்தரவு!!

ஸ்டெர்லைட் ஆலைக்கு உடனடியாக மின் இணைப்பு வழங்க வேண்டும்  என்று  உச்சநீதிமன்றம்  உத்தரவிட்டு உள்ளது.

ஸ்டெர்லைட் போராட்டம்: 

தூத்துக்குடியில் வேதாந்த நிறுவனத்துக்கு சொந்தமான ஸ்டெர்லைட் ஆலையை ஏற்படும் பாதிப்பால் தூத்துக்குடி மக்கள் போராட்டம் நடத்தினர்.மே 22ஆம் தேதி நடந்த போராட்டத்தில் காவல்துறை நடத்திய தூப்பாக்கி சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர்.அதைத் தொடர்ந்து தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை மூட அரசாணை  வெளியிட்டது.

 ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு:

Image result for தமிழ்நாடு பசுமை தீர்ப்பாயம்

டிசம்பர் 15 ஆம் தேதி  தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்தது.அதேபோல் ஆலைக்கு தேவையான மின்சார வசதியை உடனடியாக கொடுக்க வேண்டும்.தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் புதிய வழிமுறைகளை அளிக்கவும் தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்தது.

பின்னர் ஸ்டெர்லைட் ஆலையை திறக்கும் உத்தரவை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்தது.
அதேபோல் உச்சநீதிமன்றத்தில் ஸ்டெர்லைட்  ஆலையை திறக்க அனுமதி கேட்டு வேதாந்தா நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. இந்த  வழக்கில் உச்சநீதிமன்றம்  தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு உடனடியாக மின் இணைப்பு வழங்க வேண்டும்  என்று  உத்தரவிட்டு உள்ளது.மேலும் பசுமை தீர்ப்பாய உத்தரவை அமல் செய்யவில்லை என தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்து உள்ளது.
போலீஸ் பாதுகாப்புடன் சென்று ஸ்டெர்லைட் ஆலையை தூத்துக்குடி மாவட்ட  ஆட்சியர் திறக்க வேண்டும் என உத்தரவிட்டு உள்ளது.

 

Leave a Comment