அஞ்சல்துறை தேர்வை மாநில மொழிகளில் நடத்த வேண்டும் -கே.எஸ்.அழகிரி

தபால்துறை போட்டித் தேர்வுகள் இனி தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் நடத்தப்பட மாட்டாது என்று  மத்திய அரசு  அறிக்கை வெளியிட்டது.

இந்த நிலையில் இது தொடர்பாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி செய்தியாளர்களிடம் பேசினார்.அப்பொழுது அவர் கூறுகையில், தபால் துறை தேர்வுகளை இந்தி, ஆங்கிலத்தில் மட்டுமே எழுத வேண்டும் என மத்திய அரசு அறிவித்திருப்பது இந்தி பேசாத மக்கள் மீது தொடுக்கப்பட்ட தாக்குதலாகும்.அஞ்சல்துறை தேர்வை மாநில மொழிகளான தமிழ், ஆங்கிலம், மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் நடத்த வேண்டும்  தெரிவித்தார்.