- கவினின் அட்டகாசமான பதிவு.
- பிக் பாஸுக்கு பிறகு லாஸ்லியாவுடன் ஒரு போட்டோ கூட போடல.. லாஸ்லியாவுக்கு கோவிந்தாவா?
நடிகர் கவின் தமிழ் சினிமாவில் பீட்சா என்ற படத்தில் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியலில் நடித்ததன் மூலம் பிரபலமானார். இவர் தற்போது நட்புன்னா என்னனு தெரியுமா என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் இவர் மக்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில், இவர் தனது இணைய பக்கத்தில் தனது நண்பருடன் இணைந்து எடுத்த புகைப்படத்தை பதிவிட்டு, LHS நாட் ஈகுவல் டூ RHS என குறிப்பிட்டுள்ளார்.
இதனை பார்த்த ரசிகர்கள், பிக் பாஸுக்கு பிறகு லாஸ்லியாவுடன் ஒரு போட்டோ கூட போடல.. லாஸ்லியாவுக்கு கோவிந்தாவா? என்றும், பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த நண்பர் கூடவும் போட்டோ எடுத்து போடவில்லை என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.