பிரபல பத்திரிகை இன வெறியை தினிக்கிறதா.? சுற்றுசூழல் ஆர்வலர் திடீர் புகார்!

பிரபல பத்திரிகை இன வெறியை தினிக்கிறதா.? சுற்றுசூழல் ஆர்வலர் திடீர் புகார்!

  • பிரபல பத்திரிகை இன வெறியை தினிப்பதாக சுற்றுசூழல் ஆர்வலர் புகார் அளித்துள்ளார்.
  • இதன் காரணமாக தனது இணையதள பக்கத்தில் வருத்தத்துடன் வீடியோ பதிவிட்டுள்ளார்.

கிழக்கு ஆப்பிரிக்காவில் உகாண்டாவை சேர்ந்தவர் வனேசா நகதே ஆவார்.இவர் ஒரு சுற்றுசூழல் ஆர்வலராக பணியாற்றி வருகிறார்.இந்நிலையில் இவர் தன்பெர்க் முதலான நான்கு சுற்றுசூழல் ஆர்வலர்களுடன் புகைப்படம் ஒன்றிற்கு போஸ் கொடுத்துள்ளார்.

ஆனால் பிரபல அமெரிக்க பத்திரிகை உட்பட பல பத்திரிக்கைகள் அந்த படத்தை வெளியிட்ட போது அதில் கருப்பின பெண்ணான வனேசா நகதே புகைப்படம் இல்லை.அவர் இருந்த பகுதி மட்டும் வெட்டப்பட்டு மற்ற பெண்களின் புகைப்படத்தை மட்டுமே பத்திரிகைகள் வெளியிட்டுள்ளன.

இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான வனேசா நகதே,வாழ்க்கையில் முதன் முறையாக இனவெறி என்ற வார்த்தையின் பொருளை புரிந்து கொண்டதாக கண்ணீருடன் தனது இணையதள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் அமெரிக்காதான் குறைந்த அளவு கார்பனை வெளியிடும் நாடு எனவும் ஆனால் சுற்றுசூழல் பிரச்சனைகளினால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது நாங்கள்தான் என்றும் வருத்தத்துடன் கூறியுள்ளார்.

மேலும் நீங்கள் எங்களை இருட்டடிப்பு செய்வதால் எதுவும் மாறிவிடாது என்று ஊடங்களை குற்றம் சாட்டியுள்ளார்.இந்நிலையில் மிகவும் கொடூரமானது இந்த உலகம் இதற்கு மேல் என்ன சொல்வது என்று தெரியவில்லை என்றும் கூறியுள்ளார்.

ஆனால் அந்த புகைப்படத்தின் பின்னால் ஒரு கட்டிடம் இருப்பதாகவும் அதை அகற்றி ஒரே மாதிரியான பின்னணியை கொடுக்கும் வகையில் எடிட் செய்யும் போது அந்த கருப்பின பெண்ணின் புகைப்படம் தவறிவிட்டதாக அந்த பிரபல ஊடகம் தெரிவித்துள்ளது.

 

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Join our channel google news Youtube