ஐதராபாத்தில் வீடு வாங்கும் பிரபல நடிகை!

Popular actress to buy house in Hyderabad!

நடிகை நிவேதா பெத்துராஜ் பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் ஒருநாள் கூத்து என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தற்போது இவருக்கு தெலுங்கில் நல்ல மார்க்கெட் உருவானதால், அதில் ஆர்வம் காட்டி வருகிறார். இந்நிலையில், தெலுங்கில் படம் நடிக்கும் ஐதராபாத்தில் வாடகை வீட்டில் தங்கி தான் இப்படங்களில் நடிக்கிறார். இதனையடுத்து, தெலுங்கில் அவருக்கு பட வாய்ப்புகள் அதிகரித்து வருவதால், ஐதராபாத்தில் புதிய வீடு வாங்கி குடியேறவுள்ளாராம். இதனால், அவர் தன் உதவியாளரை வைத்து வீடு தேடும் பணியில் ஈடுபட்டு வருகிறாராம்.

Actress Nivetha Bethuraj is a famous Indian actress. She made her film debut in Tamil cinema by starring in the movie 'Odayal Koothu'. Now he has a good market in Telugu and is interested in it. In this case, he is staying in a rented house in Hyderabad where the film is being made in Telugu. Subsequently, he will have to buy a new house in Hyderabad as his film opportunities are increasing in Telugu. Thus, he is engaged in the search for a house with his assistant.