நடிகர் ஆர்யாவுக்கு ஜோடியாகும் பிரபல நடிகை!

இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில், நடிகர் ஆர்யா நடித்து வருகிறார். இப்படத்திற்கு சல்பேட்டா என பெயரிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இப்படம் குத்துசண்டை விளையாட்டை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் நடிகர் ஆர்யா பாக்ஸராக நடிக்கிறார். 

இந்நிலையில், இப்படத்தில் நடிகர் ஆர்யாவுக்கு ஜோடியாக, இளம் நடிகையான துஷாரா நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இவர் ஏற்கனவே போதை ஏறி புத்தி மாறி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.