இன்று முதல் தொடங்கியது மணிரத்னத்தின் பிரம்மாண்டம்! பொன்னியின் செல்வன்!

இன்று முதல் தொடங்கியது மணிரத்னத்தின் பிரம்மாண்டம்! பொன்னியின் செல்வன்!

  • மணிரத்தினம் இயக்கத்தில் அடுத்த உருவாக உள்ள திரைப்படம் பொன்னியின் செல்வன்.
  • இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இன்று முதல் சூட்டிங் ஆரம்பிக்கிறது.
எழுத்தாளர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை தழுவி பிரம்மாண்ட திரைப்படமாக உருவாக்க இயக்குனர் மணிரத்னம் தற்போது தயாராகி விட்டார். இப்படத்திற்கான லொகேஷன் பார்க்கும் பணிகள் நிறைவு பெற்று, இன்று முதல் ஷூட்டிங் ஆரம்பிக்கபட உள்ளது. இப்படத்தினை லைகா நிறுவனம் பிரம்மாண்டமாக இரு பாகங்களாக தயாரிக்க உள்ளது என தகவல் வெளியாகி உள்ளது. இப்படத்தில், விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, அமிதாப்பச்சன், லால், ஐஸ்வர்யாராய் என பலர் இப்படத்தில் நடிக்க உள்ளனர். பிரம்மாண்டமாக உருவாக உள்ள இத்திரைப்பட ஷூட்டிங் இன்று முதல் தாய்லாந்திலுள்ள அடர் காட்டில் நடைபெற உள்ளது. ஏ.ஆர்.ரகுமான் இப்படத்திற்கு இசையமைக்கவுள்ளார். ரவிவர்மன் இப்படத்திற்கு ஒளிப்பதிவை மேற்கொள்ள உள்ளார். இப்படம் பற்றிய அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கபடுகிறது.

Latest Posts

மதுரையில் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மாலை அணிவித்தார் திமுக தலைவர்!
#KXIP vs SRH: பஞ்சாப்பை வீழ்த்துமா ஹைதராபாத்...!
76 ஆண்டுகளுக்கு பிறகு நாளை இரவு வானில் தோன்றவுள்ள அதிசயம்! என்ன தெரியுமா?
இன்றைய முட்டை விலை..!
யார் யாரு என்னென்ன பேசுறீங்கன்னு நெற்றியில் அடித்தது போல சொல்லுவேன்!
மிலாதுன் நபி: இத்திருநாள் சகோதரத்துவத்தை மேம்படுத்தும் என நம்புகிறேன்! பிரதமர் மோடி ட்வீட்!
ஒரு லட்சம் செலவுப்பா...அம்மாகிட்ட திட்டுவாங்க விடாதீங்க..ரீலிஸ் பண்ணுங்க...
சர்வதேச திரைப்பட விழா ஒத்திவைப்பு
Airtel வாடிக்கையாளர்களுக்கு பெரும் அதிர்ச்சி
இந்தியாவில் 80 லட்சத்தை கடந்த கொரோனா பாதிப்பு - அதிகரிக்கிறதா கொரோனா தொற்று!