இன்று முதல் தொடங்கியது மணிரத்னத்தின் பிரம்மாண்டம்! பொன்னியின் செல்வன்!

இன்று முதல் தொடங்கியது மணிரத்னத்தின் பிரம்மாண்டம்! பொன்னியின் செல்வன்!

  • மணிரத்தினம் இயக்கத்தில் அடுத்த உருவாக உள்ள திரைப்படம் பொன்னியின் செல்வன்.
  • இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இன்று முதல் சூட்டிங் ஆரம்பிக்கிறது.
எழுத்தாளர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை தழுவி பிரம்மாண்ட திரைப்படமாக உருவாக்க இயக்குனர் மணிரத்னம் தற்போது தயாராகி விட்டார். இப்படத்திற்கான லொகேஷன் பார்க்கும் பணிகள் நிறைவு பெற்று, இன்று முதல் ஷூட்டிங் ஆரம்பிக்கபட உள்ளது. இப்படத்தினை லைகா நிறுவனம் பிரம்மாண்டமாக இரு பாகங்களாக தயாரிக்க உள்ளது என தகவல் வெளியாகி உள்ளது. இப்படத்தில், விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, அமிதாப்பச்சன், லால், ஐஸ்வர்யாராய் என பலர் இப்படத்தில் நடிக்க உள்ளனர். பிரம்மாண்டமாக உருவாக உள்ள இத்திரைப்பட ஷூட்டிங் இன்று முதல் தாய்லாந்திலுள்ள அடர் காட்டில் நடைபெற உள்ளது. ஏ.ஆர்.ரகுமான் இப்படத்திற்கு இசையமைக்கவுள்ளார். ரவிவர்மன் இப்படத்திற்கு ஒளிப்பதிவை மேற்கொள்ள உள்ளார். இப்படம் பற்றிய அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கபடுகிறது.

Latest Posts

#49 இந்தியர்களை சிறைபிடித்தது பாக்...!
முட்டையில் நோயெதிர்ப்பாற்றல் அதிகம் - மஹாராஷ்டிராவில் அதிகரித்த முட்டையின் தேவை!
#பாஜக பஞ்சத்திற்கு வழிகாட்டுகிறது- மசோதா குறித்து விளாசல்
சிம்புவின் அடுத்த திரைப்படம் என்ன தெரியுமா...?
ராணுவத்திற்கு #CAR816- துப்பாக்கிகள் தயார்!-அமீரகம் அசத்தல்
உத்தரப்பிரதேசத்தில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு - இந்திய வானிலை ஆய்வு மையம்
21-25 ஆம் தேதி வரை ஆன்லைன் வகுப்புகள் நடத்தக்கூடாது - பள்ளி கல்வித்துறை!
அவசர ஊர்தி வராததால் 14 வயது சிறுவன் 8 கி.மீ தூரம் தந்தையை தள்ளு வண்டியில் இழுத்து சென்ற அவலம்...
திமுக எம்.எல்.ஏ கார் உடைப்பு சம்பவம் தொடர்பாக இருவர் கைது!
பிவாண்டி 3 மாடி கட்டட விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 17ஆக உயர்வு... மீட்பு பணி தீவிரம்...