25 வருடத்திற்கும் மேலாக இருந்த வெற்றி கூட்டணி பிரிந்ததா?! வருத்தத்தில் ரசிகர்கள்!

Successful coalition split after more than 25 years ?! Sad fans!

  • கடந்த 25 வருடத்திற்கும் மேலாக மணிரத்தினம் இயக்கும் படங்களுக்கு வைரமுத்து மட்டுமே பாடல்கள் எழுதி வந்தார்.
  • ஆனால், தற்போது மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகிவரும் பொன்னியின் செல்வன் படத்தில் வைரமுத்து பாடல் எழுதவில்லை என கூறப்படுகிறது.
தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குனராக உள்ள மணிரத்னம் இயக்கும் பெரும்பாலான படங்களில், அதாவது கடைசி 25 வருடங்களில் அனைத்து படங்களுக்கும் கவிப்பேரரசு வைரமுத்து தான் பாடல்கள் எழுதி வந்தார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து வந்தார். தற்போது மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் பிரமாண்ட சரித்திர படமான பொன்னியின் செல்வன் படத்தின் ஷூட்டிங் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க உள்ளார். ஆனால், வைரமுத்து இப்படத்தில் பாடல்கள் எழுதவில்லை என தகவல் வெளியாகி உள்ளது. சரித்திர பின்னணி கொண்ட படத்தில் வைரமுத்து எழுதாதது ரசிகர்களுக்கு மிகுந்த வருத்தத்தை அளித்துள்ளது. இந்த படத்தில் 15-ற்கும் மேற்பட்ட பாடல்கள் உள்ளதாக கூறப்படுகிறது. அதில் சில பாடல்களை கபிலன் எழுத உள்ளார்என கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.