பொன்னியின் செல்வனில் நான் இல்லை! அந்த செய்தி முற்றிலும் வதந்தி!

I'm not in Ponni's cell! That news is totally rumored!

  • மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் திரைப்படம் தற்போது வேகமாக உருவாகிவருகிறது. 
  • இப்படத்திலிருந்து வைரமுத்து விலகிவிட்டார் அதற்க்கு பதிலாக கபிலன் இணைந்துள்ளார் என தகவல்கள் பரவின. அதனை கபிலன் மறுத்துள்ளார். 
மணிரத்னம் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகிவரும் திரைப்படம் பொன்னியின் செல்வன். இப்படத்தை லைகா நிறுவனம் பிரமாண்டமாக தயாரிக்கிறது. இப்படத்தில் கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம், அமிதாப்பச்சன், ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லட்சுமி என பலர் நடிக்க உள்ளனர். இப்படத்தில் வைரமுத்து பாடல்கள் எழுதவில்லை என தகவல் பரவியது. மேலும் இப்படத்தில் வைரமுத்துவுக்கு பதிலாக கபிலன் பாடல்களை எழுத்தவுள்ளார். என தகவல் பரவியது. இதனை கபிலன் மறுத்துள்ளார். அதாவது, பொன்னியின் செல்வன் படத்திற்கு இசையமைக்கும் ஏ.ஆர்.ரகுமான் தான் விக்ரமின் 58வது படத்திற்கும் இசையமைக்கிறாரம். விக்ரம் 58இல் தான் கபிலன் பாடல்கள் எழுதுகிறாராம். அதனால் தான் அடிக்கடி ஏ.ஆர்.ரகுமானை சந்திக்க செல்கிறாராம். மற்றபடி பொன்னியின் செல்வன் படத்தில் பாடல் எழுதுவது பற்றி இதுவரை யாரும் தன்னை அணுகவில்லை என கூறி  இந்த தகவலை மறுத்துவிட்டார். பொன்னியின் செல்வன் படத்தில் வைரமுத்து இருக்கிறாரா இல்லையா என இன்னும் உறுதியான தகவல்கள் வெளியாகவில்லை.