பொன்னியின் செல்வனில் யார் யாருக்கு என்ன கதாபாத்திரம்?! வெளியான முக்கிய தகவல்!

பொன்னியின் செல்வனில் யார் யாருக்கு என்ன கதாபாத்திரம்?! வெளியான முக்கிய தகவல்!

  • பொன்னியின் செல்வன் கதையை மணிரத்தினம் திரைப்படமாக தற்போது இயக்கி வருகிறார்.
  • இப்படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, அமிதாப்பச்சன், ஜெயராம், விக்ரம்பிரபு ஐஸ்வர்யாராய், ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோர் நடிக்க உள்ளனர்.
கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை தழுவி தற்போது பொன்னியின் செல்வன் படத்தை இயக்குனர் மணிரத்னம் இயக்கவுள்ளார். இப்படத்தின் கதையை மணிரத்னமும் குமாரவேலும் இணைந்து எழுதியுள்ளனர். ஜெயமோகன் வசனம் எழுதியுள்ளார். மணிரத்னம் இப்படத்தை இயக்கவுள்ளார். லைகா நிறுவனம் இப்படத்தை பிரம்மாண்டமாக தயாரிக்க உள்ளது. ஏ.ஆர்.ரகுமான் இசையமையமைக்க உள்ளார். கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி,  அமிதாப் என பலர் நடிப்பதாக கூறப்பட்டது. தற்போது அவர்களுக்கு என்ன கதாபாத்திரம் என தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, பொன்னியின் செல்வன் கதையின் முக்கிய கதாபாத்திரமான அருள்மொழிவர்மன் கதாபாத்திரத்தில் ஜெயம் ரவி நடிக்க உள்ளாராம். கார்த்தி வந்தியதேவனாக நடிக்க உள்ளாராம். விக்ரம் கரிகாலச்சோழனாக நடிக்க உள்ளார் எனவும் படத்தின் மற்றொரு முக்கிய பெண் கதாப்பாத்திரமான நந்தினி வேடத்தில் ஐஸ்வர்யா ராய் நடிக்கிறாராம். திரிஷா குந்தவையாகவும், பூங்குழலி கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா லட்சுமியும் நடிக்கிறார்கள் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இப்பட ஷூட்டிங் தாய்லாந்தில் பிரம்மாண்டமாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.