நடிகர் ரஜினி பொங்கல் வாழ்த்து..ரசிகர்கள் உற்சாகம்

நடிகர் ரஜினி பொங்கல் வாழ்த்து..ரசிகர்கள் உற்சாகம்

  • உற்சாகமாக கொண்டாடப்பட்டு வரும் தமிழர் திருநாள் 
  • நடிகர் ரஜினி இருகரம் கூப்பி தனது ரசிகளுக்கு பொங்கல் வாழ்த்து.
தமிழகம் மட்டுமல்லாமல் உலக முழுவதும் வாழும் தமிழ் சொந்தங்கள் அனைவரும் இன்று தமிழர் திருநாளை கொண்டாடி வருகின்றனர்.ஜல்லிகட்டும் களைக்கட்டி காளைகளும் வாடிவாசலில் சீறிப்பாய்ந்து வருகின்றது.சீறிப்பாயும் காளைகளை அடக்க இளங்காளைகளும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.இந்நிகழ்வுகளை எல்லாம் மக்கள் நேரடியாகவும் தொலைக்கட்ட்சி வழியாகவும் கண்டு ரசித்து வருகின்றனர் பொங்கல் திருநாளை முன்னிட்டு அரசியல் தலைவர் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்ற நிலையில் நடிகர் ரஜினிகாந்த் தனது ரசிகர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். நடிகர் ரஜினிகாந்த்தின் போயஸ் தோட்ட இல்லத்தின் முன் இன்று வாழ்த்து தெரிவிக்க அவருடைய ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கூடி இருந்தனர்.தனக்கு வாழ்த்து தெரிவிக்க வந்த ரசிகர்களை நேரில் வாழ்த்து தெரிவிக்க வீட்டில் இருந்து வெளியே வந்த ரஜினிகாந்த் இரு கரம் கூப்பி அவர்களுக்கு பொங்கல் வாழ்த்து தெரிவித்தார்.மேலும்  தனது ரசிகர்களின் வாழ்த்துக்களையும்  ஏற்றுக் கொண்டார்.