சீறிப்பாயும் காளைகளை அடக்க 848 இளம்காளைகள் களமிறங்க தேர்வு...!!!

சீறிப்பாயும் காளைகளை அடக்க களமிறங்க 848 இளம்காளைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். பொங்கல்

By kavitha | Published: Jan 12, 2019 07:53 PM

சீறிப்பாயும் காளைகளை அடக்க களமிறங்க 848 இளம்காளைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். பொங்கல் தினத்தில் சீறிப்பாய காத்திருக்கும் காளைகளையும் அதனை அடக்க வரும் இளம்காளைகளும் இடம்பெறுவது வழக்கம் மேலும் பொங்கல் என்றால் நினைவுக்கு வருவதே ஜல்லிக்கட்டு. அதன் படி இந்தாண்டுக்கான உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிக்காக  ஒட்டுமொத்தமாக 876 வீரர்கள் கலந்து கொண்ட தேர்வில் 28 பேர் நிராகரிக்கப்பட்ட நிலையில் 848 மாடுபிடி வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.மேலும் இவர்கள் அனைவருக்கும் மருத்துவ பரிசோதனைக்கு நடைபெற்ற பிறகே ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொள்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Step2: Place in ads Display sections

unicc