1,000 ரூபாய் ரொக்கத்துடன் கூடிய பொங்கல் பரிசு – ரூ.1,677 கோடியை கூட்டுறவு வங்கிகளுக்கு அளிப்பு

  • பொங்கல் பரிசாக ரூ.1000 வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.
  • பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்க ரூ.1,677 கோடியை கூட்டுறவு வங்கிகளுக்கு அளித்த‌து தமிழக அரசு.

ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகை வருவதை ஒட்டி அரிசி ரேஷன் அட்டை வைத்துள்ளவர்களுக்கு பொங்கல் பரிசாக ரூ.1000 வழங்கப்படும் என்றும் இதனுடன் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.அதில், 1 கிலோ பச்சரிசி,1 கிலோ  சர்க்கரை,2 அடி துண்டு கரும்பு,20 கிராம் முந்திரி,20 கிராம் உலர் திராட்சை,5 கிராம் ஏலக்காய் உள்ளிட்ட பொருட்களும் இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டது.

எனவே  உள்ளாட்சி தேர்தல் காரணமாக பொங்கல் பரிசு வழங்கப் படவில்லை.தமிழகத்தில் ஜனவரி 9 முதல் 12ஆம் தேதிக்குள் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்படும் என்று தமிழக அரசு தகவல் தெரிவித்தது.மேலும் விடுபட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு ஜனவரி 13-ஆம் தேதிக்குள் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்க வேண்டும் என்றும்  பொங்கல் பரிசுத்தொகுப்பும், ரூ.1000 ரொக்கத் தொகையும் ஒரே நேரத்தில் வழங்கப்பட வேண்டும் என்று  தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.எனவே பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.1,000 வழங்குவதற்காக ரூ.1,677 கோடியை கூட்டுறவு வங்கிகளுக்கு அளித்த‌து தமிழக அரசு.