பொங்கல் பரிசாக ரூ.1000 வழங்கப்படும் - முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு

பொங்கல் பரிசாக ரூ.1000 வழங்கப்படும் - முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு

பொங்கல் பரிசாக ரூ.1000 வழங்கப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். கள்ளக்குறிச்சியின் புதிய மாவட்ட துவக்‌க விழா  சாமியார்மடத்தில் உள்ள மைதானத்தில் நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் பழனிசாமி கலந்து கொண்டு கள்ளக்குறிச்சியின்  மாவட்‌டத்தின் நிர்வாகப் பணிகளை தொடங்கி வைத்தார்.இதன் பின்னர் முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதாவது,  அரிசி ரேஷன் அட்டை வைத்துள்ளவர்களுக்கு பொங்கல் பரிசாக ரூ.1000 வழங்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.மேலும் கூடவே பொங்கல் தொகுப்பாக ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை, கரும்பு, முந்திரி உள்ளிட்ட பொருட்களும் வழங்கப்படும் .கடந்த ஆண்டை போல், இந்த ஆண்டும் பொங்கலுக்கு பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.