பொங்கல் பண்டிகை : இதுவரை ரூ.6.84 கோடி வசூல் – அமைச்சர் எம்.ஆா்.விஜயபாஸ்கா்

பொங்கல் பண்டிகை : இதுவரை ரூ.6.84 கோடி வசூல் – அமைச்சர் எம்.ஆா்.விஜயபாஸ்கா்

  • பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் .
  • முன்பதிவு வாயிலாக ரூ.6.84 கோடி வசூலாகியுள்ளது என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆா்.விஜயபாஸ்கா் தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் தீபாவளி, பொங்கல், போன்ற விடுமுறையின் போது பல்வேறு நகரங்களில் தங்கி வேலை செய்யும் மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வார்கள்.அதிலும் சென்னை போன்ற பெரும் நகரங்களில் இருந்து  வேலை செய்யும் பொதுமக்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்கின்றனர்.அந்த நேரங்களில் கூட்ட நெரிசலைத் தவிர்க்க அரசு போக்குவரத்துக்கழகம் வழக்கமாக இயங்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை  இயக்கி வருகிறது.

இந்நிலையில் இது குறித்து போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆா்.விஜயபாஸ்கா் கூறுகையில், தமிழகம் முழுவதும் ஜனவரி 10 முதல் 14-ஆம் தேதி வரை 30,120 பேருந்துகள் இயக்கப்படுகின்றது. இதற்காக கோயம்பேடு பேருந்து நிலையத்தில் 15 சிறப்பு முன்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.மேலும் பூந்தமல்லி மற்றும் தாம்பரம் சானடோரியம் பேருந்து நிலையத்தில் தலா 1 மையம் அமைக்கப்பட்டுள்ளது.தற்போது வரை முன்பதிவு வாயிலாக ரூ.6.84 கோடி வசூலாகியுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

Join our channel google news Youtube