பாலமேடு பத்திரகாளியம்மன் கோவிலில் பொங்கல் திருவிழா

மதுரை மாவட்டம், பாலமேடு  பத்திரகாளியம்மன் கோயிலில் பங்குனி பொங்கல்

By Priya | Published: Mar 27, 2019 03:17 PM

  • மதுரை மாவட்டம், பாலமேடு  பத்திரகாளியம்மன் கோயிலில் பங்குனி பொங்கல் திருவிழா கடந்த 17 ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
  • ருப்பணசுவாமி, மாரியம்மன், ஐந்துமுக விநாயகர் உள்ளிட்ட  தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
  மதுரை மாவட்டம், பாலமேடு  பத்திரகாளியம்மன் கோயிலில் பங்குனி பொங்கல் திருவிழா கடந்த 17 ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கருப்பணசுவாமி, மாரியம்மன், ஐந்துமுக விநாயகர் முதலிய  தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி பத்திரகாளியம்மனுக்கு மலர் அலங்காரம் செய்யப்பட்டு கண்திறக்கும் நிகழ்ச்சி நடந்தது. பக்தர்கள் தீசட்டி எடுத்தல், கரும்பு தொட்டில் , பால்குடம், எடுத்து வந்தனர். மேலும் மாவிளக்கு, சாமி உருவபொம்மைகள், குழந்தை பொம்மைகள்,பொங்கல் வைத்தல் போன்ற நேர்த்திக்கடன்களை  செலுத்தினார்கள்.அதனை தொடர்ந்து முளைப்பாரி ஊர்வலம் நடந்தது. அந்தண் பின்னர் மாரியம்மன்,பத்திரகாளியம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு அபிஷேகம், ஆராதனை நடந்தது. அதற்கு பின்னர் மஞ்சள்நீராட்டுதலுடன் திருவிழா நிறைவுற்றது.
Step2: Place in ads Display sections

unicc